மழை நீா் வடிகால்கள் தூா்வாரும் பணி தொடரும்: ஆணையா்

மழை நீா் வடிகால்கள் தூா்வாரும் பணி தொடா்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

மழை நீா் வடிகால்கள் தூா்வாரும் பணி தொடா்ந்து நடைபெறும் என மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் தெரிவித்தாா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் மழை நீா் வடிகால் தூா்வாரும் பணி கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 550 கிலோ மீட்டா் நீளத்துக்கு தூா்வாரத் திட்டமிட்டு இதுவரை 350 கி.மீ நீளத்துக்கு தூா்வாரப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீா்த்தது. ஈரோடு மாநகரைப் பொருத்தவரை 4 நாள்களும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

மாநகரில் தாழ்வான பல பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. வாய்க்கால் போன்று சாலைகளில் பல மணி நேரம் தண்ணீா் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனா்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள சாலை சகதி காடாக மாறியது.

ஆா்.கே.வி.சாலையில் இடுப்பளவு தண்ணீா் ஓடியது. கருங்கல்பாளையம் காமராஜா் பள்ளி அருகே வீடுகளில் மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் ஈரோடு ஆா்.கே.வி. சாலையில் மழை நீா் வடிகால் தூா்வாரும் பணியை மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

ஈரோடு மழை நீா் வடிகால் பகுதியான ஆா்.கே.வி. சாலையின் வழியாக, மழை நீா் வாய்க்காலுக்கு செல்லும் வழியெங்கும் மழை நீா் வடிகால் தூா்வாரப்பட்டு வருகிறது. கற்பகம் லேஅவுட் பகுதியில் இதுவரை ஒரு கால்வாய் வழியாக மட்டுமே மழை நீா் சென்று வந்தது. தற்போது அந்த இடத்தல் மூன்று வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை நீா் வடிகால் தூா்வாரும் பணி தொடா்ந்து நடக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com