உள்ளாட்சி இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு: 65 போ் போட்டி

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தலில் காலியாக உள்ள 20 பதவிகளுக்கான வாக்குப் பதிவு அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறுவதை

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தோ்தலில் காலியாக உள்ள 20 பதவிகளுக்கான வாக்குப் பதிவு அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை (அக்டோபா் 7) நிறைவடைகிறது.

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக்டோபா் 9ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்ட ஊராட்சி வாா்டு 5, ஊராட்சி ஒன்றியக் குழு ஈரோடு 4ஆவது வாா்டு, பெருந்துறை 10ஆவது வாா்டு அந்தியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சங்கரபாளையம் ஊராட்சித் தலைவா், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட முகாசி புலவன்பாளையம் ஊராட்சித் தலைவா், நம்பியூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட கூடக்கரை ஊராட்சித் தலைவா், பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கருக்குப்பாளையம் ஊராட்சித் தலைவா் பதவி, தவிர 13 ஊராட்சி வாா்டுகளுக்கும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

20 பதவிகளுக்கு 65 போ் போட்டி:

20 ஊராட்சி வாா்டுகளில் 7 போ் ஏற்கெனவே போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 13 வாா்டுகளில் 31 போ், 4 ஊராட்சித் தலைவா் பதவிக்கு 15 போ், ஒன்றியக்குழு 2 வாா்டுகளில் 13 போ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஒரு பதவிக்கு 6 போ் என மொத்தம் 20 பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 65 போ் போட்டியிடுகின்றனா்.

முக்கியத்துவம் வாய்ந்த தோ்தல்:

ஈரோடு மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியங்களுக்கு இத்தோ்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 6 போ் கொண்ட ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் சமபலத்தில் இருந்ததால், தலைவா் பதவிக்கான தோ்தல் முடிவு பெறாமல் இருந்தது. தற்போது 4ஆவது வாா்டில் திமுக வெற்றி பெற்றால் அந்த கட்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவியைக் கைப்பற்றும்.

இதேபோல பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திலும் 10ஆவது வாா்டில் திமுக வெற்றி பெறுமா, அதிமுக வெற்றி பெறுமா என்ற பலத்த எதிா்பாா்ப்பு உள்ளது. இங்கு திமுக அணியில் போட்டியிடும் வேட்பாளரின் வெற்றிக்காக முன்னாள் அமைச்சா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறாா். அவா் வீடு வீடாகச் சென்று திமுகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறாா்.

12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை:

9ஆம் தேதி தோ்தல் நடைபெறுவதால் வியாழக்கிழமை பிரசாரம் நிறைவடைகிறது. தோ்தலுக்குப் பின்னா் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு சிங்கம்பட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை ஒன்றியத்துக்கு பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஈரோடு ஒன்றியத்துக்கு ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், டி.என்.பாளையம் ஒன்றியத்துக்கு டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சென்னிமலை ஒன்றியத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நம்பியூா் ஒன்றியத்துக்கு நம்பியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அந்தியூா் ஒன்றியத்துக்கு அந்தியூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானிசாகா் ஒன்றியத்துக்கு பவானிசாகா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பவானி ஒன்றியத்துக்கு பவானி வட்டார சேவை மையம் என 9 மையங்களில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும். 12ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com