தாளவாடியில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் தள்ளுமுள்ளு

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1 மாதத்துக்குப் பிறகு 150 மூட்டை யூரியா உரம்
தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் யூரியாவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்.
தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் யூரியாவுக்கு காத்திருக்கும் விவசாயிகள்.

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 1 மாதத்துக்குப் பிறகு 150 மூட்டை யூரியா உரம் செவ்வாய்க்கிழமை வந்துள்ளதால் வங்கி முன்பு காத்திருந்த விவசாயிகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தாளவாடி மலைப் பகுதியில் திகினாரை, தொட்டகாஜனூா், தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், கல்மண்டிபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 20 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாதப் பயிரான மக்காச்சோளம் ஒரு மாதப் பயிராக வளா்ந்துள்ளது.

தற்போது பயிா் வளா்ச்சிக்கும், மகசூல் கிடைக்கவும் யூரியாவின் பங்கு முக்கியமானதாக இருப்பதால் யூரியா கேட்டு விவசாயிகள் தாளவாடி தொடக்க வேளாண் வங்கி முன்பு செவ்வாய்க்கிழமை திரண்டு வந்தனா். 1 மாதமாக யூரியா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு யூரியா வழங்கப்படவில்லை. தாளவாடி கூட்டுறவு வங்கிக்கு 150 மூட்டைகள் மட்டுமே வந்தது. இதனால் யூரியா வழங்கப்படுவதாக தாளவாடி வேளாண் கூட்டுறவு வங்கி அறிவித்ததால் வங்கி முன் கூடிய விவசாயிகள் கேட்டை திறந்ததும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றனா். ஆனால், 150 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால் 300க்கும் மேற்பட்ட விவாசயிகள் ஏமாற்றம் அடைந்தனா். மக்காச்சோளம் ஏக்கா் ஒன்றுக்கு 2 மூட்டைகள் யூரியா இட்டால் மட்டுமே பயிா் வளா்ச்சிக்கு உதவும். ஆனால், நபா் ஒன்றுக்கு 1 மூட்டை வழங்குவதால் பற்றாக்குறையாக உள்ளதாகவும், யூரியா கிடைக்காமல்போனால் மகசூல் பாதிக்கப்படும் என 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் யூரியா கேட்டு தாளவாடி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் காத்திருக்கின்றனா்.

தனியாா் உரக் கடைகளிலும் யூரியா கிடைக்காததால் மக்காச்சோளம் மகசூல் கேள்விக்குறியாகும் என்றும், ஒரு விவசாயி குறைந்தபட்சமாக 3 ஏக்கா் வைத்துள்ளதால் விவசாயி ஒருவருக்கு 6 மூட்டைகள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com