ஈரோடு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் யூனிட் 

ஈரோடு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன புதிய சிடி ஸ்கேன் யூனிட் துவங்கப்பட்டுள்ளது.
ஈரோடு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் யூனிட் 
ஈரோடு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன சிடி ஸ்கேன் யூனிட் 

ஈரோடு: ஈரோடு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அதிநவீன புதிய சிடி ஸ்கேன் யூனிட் துவங்கப்பட்டுள்ளது.

ஈரோடு தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, விஷ முறிவு மற்றும் பாம்பு கடி சிகிச்சை, பொதுமருத்துவம், மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, பொது மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, இருதய மருத்துவம், மகளிர், மகப்பேறு மருத்துவம், குழந்தையின்மை, குழந்தைகள் நல மருத்துவம், மனநல மருத்துவம், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த மருத்துவமனையில் இருதயம், மூளை, முழு உடல் பரிசோதனையினை துல்லியமாக எடுக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட சிடி ஸ்கேன் யூனிட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். சிகே மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவ்குமார் முன்னிலை வகித்தார். மொடக்குறிச்சி தொகுதி பாஜ எம்.எல்.ஏ.,வும், மருத்துவமனையின் இயக்குநருமான டாக்டர் சி.கே. சரஸ்வதி குத்துவிளக்கேற்றினார். 

சிறப்பு அழைப்பாளராக இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவரும், சிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கே.எம். அபுல் ஹசன் கலந்து கொண்டு, சிடி ஸ்கேன் யூனிட்டினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சிகே மருத்துவமனையின் மருத்துவர்கள் சம்பத்குமார், பிரபாவதி, தமிழ்செல்வி, சேதுபதி, ரவிகுமரன், கிருத்திகா, நடராஜன், சேகர், அருண்பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com