அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிடுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்
தடுப்பூசி செலுத்தும் பணியைப் பாா்வையிடுகிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம்

அந்தியூா் பேரூராட்சிப் பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் பேரூராட்சி காளிதாஸ் காலனி பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சின்னதம்பிபாளையம் அரசு ஆரம்ப சுகாராத நிலைய தலைமை மருத்துவா் சக்தி கிருஷ்ணன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினா்.

இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் நேரில் பாா்வையிட்டாா். மேலும், அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் யசோதாதேவி, ஈரோடு வடக்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் எம்.பாண்டியம்மாள், பேரூா் துணைச் செயலாளா் ஏ.சி.பழனிசாமி, அந்தியூா் ஒன்றிய நெசவாளா் அணி துணை அமைப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com