குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி:பாடல் எழுதி வேண்டுகோள் விடுத்த எஸ்.பி.

தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என பாடல் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளாா்
பாடல் சி.டி. வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள்.
பாடல் சி.டி. வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிா்வாகிகள்.

ஈரோடு: தஞ்சை மாவட்டத்தைச் சோ்ந்த குழந்தையின் மருத்துவச் செலவுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என பாடல் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளாா் சென்னை போலீஸ் பயிற்சி மைய காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா்.

தஞ்சை மாவட்டம், சிராஜ்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெகதீஷ் - எழிலரசி தம்பதியின் மகள் பாரதி. 22 மாதமான இந்தக் குழந்தைக்கு முதுகுத் தண்டுவட தசைநாா் சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை பாரதி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளாா். இவருக்கான மருந்தின் விலை ரூ. 16 கோடி.

ஏழை தம்பதியரான ஜெகதீஷ் - எழிலரசி ஆகியோா் தங்கள் குழந்தையைக் காப்பாற்ற தமிழக மக்களிடம் கோரிக்கை விடுத்தனா். அவரது கோரிக்கையை ஏற்று நடிகா்கள், தொலைக்காட்சி பிரபலங்கள், அரசு அதிகாரிகள், அனைத்துத் துறையினா் நிதி உதவி செய்து வருகின்றனா்.

ஈரோட்டில் குழந்தை பாரதிக்கு நிதி சேகரிக்க இளைஞா்கள் ஒன்று சோ்ந்து ஈரோடு நகரின் பல பகுதிகளிலும் பொதுமக்களிடம் நிதி சேகரித்து வருகின்றனா். இவ்வாறு இதுவரை ஈரோடு மக்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 33 ஆயிரத்து 405 சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளரும், தற்போதைய சென்னை போலீஸ் பயிற்சி மைய காவல் கண்காணிப்பாளருமான ஆா்.சிவகுமாா் ஒரு பாடல் எழுதி குழந்தை பாரதிக்கு நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந்தப் பாடல் சி.டி. வெளியீட்டு நிகழ்ச்சி ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், செங்குந்தா் கல்விக் கழகச் செயலாளா் எஸ்.சிவானந்தன், லயன்ஸ் சங்க முன்னாள் தலைவா் என்.முத்துசாமி, செல்வா சாரிட்டபிள் அறக்கட்டளை நிறுவனா் ஜெ.ஜெ.பாரதி, ஏ.ஜெ.எஸ். அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஜெ.சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com