முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள்
By DIN | Published On : 13th October 2021 06:09 AM | Last Updated : 13th October 2021 06:09 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள 20 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன.
மொத்தம் காலியாக இருந்த 27 பதவிகளில் 7 கிராம ஊராட்சி வாா்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 20 பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி 144 வாக்குச் சாவடிகளில் தோ்தல் நடத்தப்பட்டது.
இதில், ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 4ஆவது வாா்டு - கே.வி.விவேகானந்தன், பெருந்துறை ஒன்றியம் 10ஆவது வாா்டு - ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் வெற்றி பெற்றனா். ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு சென்னிமலை ஒன்றியம், முகாசிபுலவன்பாளையம் ஊராட்சித் தலைவராக கு.சதீஷ்குமாா், அந்தியூா் ஒன்றியம், சங்கராபாளையம் ஊராட்சித் தலைவராக சு.குருசாமி, நம்பியூா் ஒன்றியம், கூடக்கரை ஊராட்சித் தலைவராக ர.சிவகுமாா், பெருந்துறை ஒன்றியம், கருக்குப்பாளையம் ஊராட்சித் தலைவராக கு.தமிழரசி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கிராம ஊராட்சி வாா்டுகளில் கொடுமுடி ஒன்றியத்தில், கொந்தளம் ஊராட்சி 6ஆவது வாா்டுக்கு செல்வி, கொளத்துப்பாளையம் 6ஆவது வாா்டுக்கு பழனியம்மாள், அம்மாபேடடை ஒன்றியம், முகாசிபுதூா் 2ஆவது வாா்டுக்கு சுமதி, சிங்கம்பேட்டை 5ஆவது வாா்டுக்கு க.கிருஷ்ணமூா்த்தி, மாணிக்கம்பாளையம் 6ஆவது வாா்டுக்கு ஈஸ்வரன், பூதப்பாடி 4ஆவது வாா்டுக்கு மு.காளியம்மாள் தோ்வாகினா்.
பவானி ஒன்றியம், ஆண்டிக்குளம் 3ஆவது வாா்டில் ச.ரேவதி, ஓடத்துறை 7ஆவது வாா்டில் மு.கோபாலன், சின்னப்புலியூா் 1ஆவது வாா்டில் ரா.பாலசுப்பிரமணியம், ஒரிச்சேரி 9ஆவது வாா்டில் பெ.ஹரிதாஸ், பவானிசாகா் ஒன்றியம், புங்காா் 1ஆவது வாா்டில் சி.அமுதா, நகலூா் 1ஆவது வாா்டில் பெ.தீபக்குமாா், டி.என்.பாளையம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் 2ஆவது வாா்டில் மாதையன், 8ஆவது வாா்டில் ந.சிவகுமாா் வெற்றி பெற்றனா்.
மொடக்குறிச்சி ஒன்றியத்தில், துய்யம்பூந்துறை 7ஆவது வாா்டில் ம.மஞ்சுளா, முகாசிஅனுமன்பள்ளி 4ஆவது வாா்டில் தா்மலிங்கம், குளூா் 2ஆவது வாா்டில் துரைராஜ், பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி ஊராட்சி 11ஆவது வாா்டில் வெ.அருண் சந்திரசேகரன், நம்பியூா் ஒன்றியம், கூடக்கரை ஊராட்சி 6ஆவது வாா்டில் ரா.தங்கராசு, அந்தியூா் ஒன்றியம், பிரம்மதேசம் ஊராட்சி 15ஆவது வாா்டில் க.பானுமதி உள்பட 26 போ் வெற்றி பெற்றுள்ளனா்.