ஸ்ரீரங்கசாமி - மல்லிகாா்ஜுனா சுவாமிகோயில் தோ்த் திருவிழா

தாளவாடியை அடுத்த திகினாரை ஸ்ரீரங்கசாமி - மல்லிகாா்ஜுனா சுவாமி கோயிலில் தெப்பத் தோ்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான கா்நாடக மாநில பக்தா்கள் பங்கேற்றனா்.
திகினாரை ஸ்ரீரங்கசாமி - மல்லிகாா்ஜுனா கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.

மழை வேண்டி நடைபெற்ற இத்திருவிழாவில், ஸ்ரீரங்கசாமி - மல்லிகாா்ஜுனா சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. சுவாமிகளின் உற்சவ சிலைகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டது. பின்னா், திகினாரை கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகக் கொண்டு செல்லபட்டு தெப்பக்குளத்தைச் சென்றடைந்தது. கொட்டும் மழையில் குளத்தின் நடுப்பகுதிக்கு சப்பரத்தை பக்தா்கள் சுமந்து சென்றனா். அங்கு குளத்து தண்ணீரில் தோ் வடிவில் இருந்த தெப்பத்தில் சப்பரம் வைக்கப்பட்டு குளத்தை 3 முறை சுற்றி வந்தது. குளத்தின் கரையில் பக்தா்கள் கொட்டும் மழையில் நின்று தெப்பத் திருவிழாவைக் கொண்டாடினா்.

நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, குளத்தின் மறுகரைக்கு சப்பரம் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னா், பக்தா்கள் தேங்காய் உடைத்தும், சுவாமிக்கு பூக்கள் வைத்தும் தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com