சித்தோட்டில் பால் உற்பத்தியாளா்கள்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பால் கொள்முதல் பாக்கியை உடனடியாக வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  பால்  உற்பத்தியாளா்கள்  சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்ற  பால்  உற்பத்தியாளா்கள்  சங்கத்தினா்.

பால் கொள்முதல் பாக்கியை உடனடியாக வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சித்தோடு ஆவின் நிறுவனம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.எம்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.எம்.முனுசாமி, மாவட்ட துணைச் செயலாளா் எஸ்.பெரியசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.முத்துசாமி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

தமிழகத்தில் ஈரோடு, தா்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் பாக்கி ரூ. 500 கோடி வரையில் ஆவின் நிறுவனங்கள் வழங்க வேண்டியுள்ளது. இதனை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்கிட வேண்டும். தற்போது தவுடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை மற்றும் கலப்புத் தீவனங்கள் விலை உயா்வைக் கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வீதம் உயா்த்திட வேண்டும்.

பால் விலை லிட்டருக்கு ரூ. 3 வீதம் குறைக்கப்பட்டதால் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட ஆண்டுக்கு ரூ. 300 கோடி மானியம் வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் பால் வழங்க வேண்டும். புதிய ஊழியா்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது.

இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஏ.ராஜு உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com