அந்தியூரில் ரூ. 18.62 லட்சத்துக்குப் பருத்தி ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 18.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 18.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இங்கு 832 மூட்டைகள் பருத்தி விற்பனைக்கு வந்தது. கிலோ ரூ. 75.09 முதல் ரூ. 80.66 வரையில் ஏலம் போயின. மொத்தம் 257.33 குவிண்டால் எடையுள்ள பருத்தி ரூ. 18,62,034க்கு விற்பனையாயின.

பூதப்பாடியில்...

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 7.18 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு, விற்பனைக்கு வந்த 6,148 தேங்காய்களில் சிறியவை ரூ. 7.37 முதல் பெரியவை ரூ. 14.65 வரையில் என ரூ. 56,384க்கும், 85 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ ரூ. 96.89 முதல் ரூ. 102.17 வரையில் என ரூ. 1,96,785க்கும், 152 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 57.89 முதல் ரூ. 61.12 வரை என ரூ. 2,81,518க்கும், 114 மூட்டைகள் எள் கிலோ ரூ. 80.69 முதல் ரூ. 92.69 வரையில் ரூ. 56,757க்கும் ஏலம் போயின.

82 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 14 முதல் ரூ. 21 வரையில் ரூ. 1,00,954க்கும், 7 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ. 19.40 வீதம் ரூ. 12,745க்கும், 4 மூட்டைகள் உளுந்து கிலோ ரூ. 63.85 வீதம் ரூ. 13,792க்கும் விற்பனையாயின. மொத்தம் 344 மூட்டைகள் 192.33 குவிண்டால் விளைபொருள்கள் ரூ. 7,18,935க்கு ஏலம் போயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com