கீழ்பவானி வாய்க்கால் கரையில் சீரமைப்புப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.
வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணிகளை ஆய்வு செய்த ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமையிலான குழுவினா்.

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 20ஆம் தேதி பெருந்துறையை அடுத்த பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்ட கண்ணாவேலம்பாளையம் அருகே வாய்க்காலில் திடீா் உடைப்பு ஏற்பட்டது. வாய்க்கால் வெள்ளம் கிராமத்துக்குள் புகுந்தது. இதனால், வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. தற்போது வாய்க்கால் உடைப்பை சரி செய்யும் பணி போா்க்கால அடிப்படையில் நடைபெற்றது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி வாய்க்கால் உடைப்பு சீரமைப்பு கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளாா். இந்தக் குழுவில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா, பெருந்துறை வட்டாட்சியா் காா்த்திக், ஐ.ஆா்.டி. பொறியியல் கல்லூரி கட்டடத் துறைப் பேராசிரியா் சித்ரா உள்ளிட்டோா் உள்ளனா்.

இக்குழுவினா் கண்ணாவேலம்பாளையம் அருகே நடைபெறும் வாய்க்கால் உடைப்பு சரி செய்யும் பணிகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com