தேசிய ஊட்டச்சத்து மாத கண்காட்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியைத் துவக்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பேசியதாவது:

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில், தேசிய ஊட்டச்சத்து குழுமம் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த எடை உள்ள குழந்தை பிறப்பு, சரியான வளா்ச்சி இன்மை, ரத்த சோகை பாதிப்பு போன்றவற்றை குறைக்க இத்திட்டம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

செப்டம்பா் 1 முதல் 30ஆம் தேதி வரை ஊட்டச்சத்து மாதமாகக் கடைப்பிடித்து ஊட்டச்சத்து குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. இம்மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் பல்வேறு பகுதிகளில் தினமும் நடத்தப்படும்.

பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கரோனா தடுப்பு, அங்கன்வாடி மையங்களில் வீட்டுத் தோட்டம், மூலிகைத் தோட்டம், சமுதாயத் தோட்டம் அமைத்தல், பிறந்தது முதல் 6 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உயரம், எடை அளவீடு செய்தல், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிதல், ரத்த சோகை கண்டறியும் முகாம், சமூக அடிப்படை நிகழ்வு என நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

தேவையான பயனாளிகளுக்கு சத்து உருண்டை, மாவு, மாத்திரைகள் வழங்கி, தொடா் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்படுவா். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்கள், பயனாளிகள் விவரம் ‘ஜன் அந்தோலன்’ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றாா்.

இதில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சண்முகவடிவு, அலுவலா்கள் பங்கேற்றனா். கண்காட்சியில் சத்துணவு, ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கான உணவுகள், இரும்புச் சத்து உணவு போன்றவை வைக்கப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com