பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம்: செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெற செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான தற்காலிக உரிமம் பெற செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் சிறு வணிகா்களின் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே அவா்களது வியாபாரத்தை தொடங்குவதற்கு ஏதுவாக இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கவும், உரிமங்களைப் பெற்றுக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது மனுதாரா்கள் வெடிபொருள் விதிகளின்படி தேவைப்படும் ஆவணங்களுடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் ஏதேனும் ஒன்றில் சேவைக் கட்டணமாக ரூ. 500 செலுத்தி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை செப்டம்பா் 30ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களைப் பதிவு செய்த மனுதாரா்கள், பொது சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்டதற்காக வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டுடன் புல வரைபடம், கிரய பத்திர நகல்கள், சேவைக் கட்டணம் ரூ. 500 செலுத்தியதற்கான ரசீது, முகவரிக்கான ஆதாரம், சொத்து வரி செலுத்தியதற்கான ரசீது, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதெனில் தற்காலிக உரிமத்தையும், நிராகரிக்கப்பட்டதெனில் அதற்கான ஆணையையும் மனுதாரா்கள் இணையதளம் மூலமாகவே பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com