பெருந்துறை சிப்காட் மாசுக் கட்டுப்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம்

பெருந்துறை சிப்காட்டில் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை வட்டாட்சியா் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
பெருந்துறை வட்டாட்சியா் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பெருந்துறை சிப்காட்டில் மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் பற்றிய ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வட்டாட்சியா் காா்த்திக் தலைமை வகித்தாா். இதில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் உதயகுமாா், மாவட்ட உதவிப் பொறியாளா் முத்துராஜ், சிப்காட் உதவி அலுவலா் சுஜா பிரியதா்சினி, பல்வேறு துறை அதிகாரிகள், சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி, ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா்கள் வி.எம்.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், சிப்காட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாசுக் கட்டுப்பாடு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை மாதந்தோறும் தவறாமல் நடத்த வேண்டும். சட்ட விரோதமாக செயல்பட்டு நிலம், நீா், காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் வெளியேற்றப்படும் கழிவுநீா் பூஜ்ய சுத்திகரிப்பு முறையில் சுத்திகரித்து மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். சிப்காட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள நச்சு திடக் கழிவுகளையும், கலப்பு உப்புகளையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com