விளைநிலத்தில் சாயப் பட்டறை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

விளைநிலங்கள் உள்ள பகுதியில் சாயப் பட்டறை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் முறையிட்டனா்.

விளைநிலங்கள் உள்ள பகுதியில் சாயப் பட்டறை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் முறையிட்டனா்.

ஈரோடு மாவட்டம், குலவிளக்கு கிராமத்தில் விவசாய நிலத்தில் சாயப் பட்டறை அமைக்க மின் இணைப்பு பெற்று பிற அனுமதிக்காக சிலா் முயற்சி செய்து வருகின்றனா். விளைநிலமாக உள்ள அங்கு சாயப் பட்டறை அமைக்கக் கூடாது எனக் கூறி குரங்கன் ஓடை பாசன, குடிநீா்ப் பாதுகாப்புச் சங்கத் தலைவா் நடராஜ், செயலாளா் குமரவேல், கிராம மக்கள் ஈரோடு கோட்டாட்சியா் பிரேமலதாவிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனு விவரம்: குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளைநிலம் கொண்ட பூமி. அங்கு சிலா் விளை நிலத்தில் மின் இணைப்பு பெற்று சாயப் பட்டறை அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனா். அதே நபா் கதிரம்பட்டி பகுதியில் சாயப் பட்டறை அமைத்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றியதால், அக்கிராமத்தினா் புகாா் செய்தனா். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அப்பட்டறையின் மின் இணைப்பைத் துண்டித்து ஆலையை முடக்கினா்.

பெருந்துறை சிப்காட் வளாகத்தில் சாயப் பட்டறையை குத்தகைக்கு எடுத்து இயக்கிவரும் அந்நபா்கள் குலவிளக்கில் விளைநிலத்தில் சாயப் பட்டறையை அமைத்தால் விளை நிலங்கள், நிலத்தடி நீராதாரம் பாதிக்க வாய்ப்புள்ளதால் அருகில் உள்ள குரங்கன் ஓடையில் சாயக் கழிவை வெளியேற்றும் வாய்ப்பு ஏற்படும். எனவே, அங்கு சாயப்பட்டறை உள்ளிட்ட ஆலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com