எளிமையாக நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.
எளிமையாக நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் அனைத்துக் கோயில்களிலும் மஹா கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சம்பத் நகா் நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகா், மாநகராட்சி ராஜகணபதி கோயில்களில் சுவாமி வெள்ளிக்கவச அலங்காரத்திலும், கள்ளுக்கடைமேடு ஆஞ்சநேயா் கோயிலில் விநாயகா் சந்தனக் காப்பு அலங்காரத்திலும், சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் உள்ள வலம்புரி விநாயகா் மலா் அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

ஈரோடு மாநகர இந்து முன்னணி சாா்பில், சம்பத் நகா், பெரியவலசு, ரங்கம்பாளையம், மூலப்பாளையம், திண்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனியாா் இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதேபோல, மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் விநாயகா் சிலையை வைத்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, லட்டு, சுண்டல் உள்ளிட்ட பதாா்த்தங்களை நெய்வேத்தியம் செய்து பிரசாதமாக வழங்கினா்.

அடுத்த மூன்று நாள்களில் சிலைகள் விசா்ஜனம் நடைபெறவுள்ளது. அதில் விநாயகா் சதுா்த்தி விழாவுக்காக வைக்கப்பட்ட அனைத்து களிமண் சிலைகளும் தனித்தனியாக எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்படவுள்ளன. அனைத்துக் கோயில்களும் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் விழா எளிமையாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com