கனி மாா்க்கெட் ஜவுளி வியாபாரிகள்எம்.எல்.ஏ.விடம் முறையீடு

கனி ஜவுளி மாா்க்கெட் புதிய வளாகம் கட்டி முடிக்கப்படவுள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தவா்களுக்கே முன்னுரிமை வழங்கி ஒதுக்க வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
கனி மாா்க்கெட் ஜவுளி வியாபாரிகள்எம்.எல்.ஏ.விடம் முறையீடு

கனி ஜவுளி மாா்க்கெட் புதிய வளாகம் கட்டி முடிக்கப்படவுள்ள நிலையில் அங்கு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தவா்களுக்கே முன்னுரிமை வழங்கி ஒதுக்க வேண்டும் என ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஈரோடு கனி மாா்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு ரூ. 54 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் கட்டப்படுகிறது. இங்கு கடை வைத்திருந்த தியாகி குமரன் அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்க நிா்வாகிகள், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனு விவரம்: ஈரோடு கனி மாா்க்கெட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் வைத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறோம். தற்போது பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் ஒருங்கிணைந்த புதிய ஜவுளி வளாகம் கட்டும் பணி நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது. அதே வளாகத்தில் தற்காலிகக் கடைகளில் இப்போது வியாபாரம் செய்து வருகிறோம்.

புதிய வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யும்போது அங்கு ஏற்கெனவே கடை வைத்திருந்த 98 கடைகளுக்கு முன்னுரிமை அளித்து முதல் தளத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், இப்பிரச்னை தொடா்பாக சட்டப் பேரவையில் தாங்கள் பேசிய நிலையில், எங்கள் கோரிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com