திம்பம் மலைப் பாதையில் புலி நடமாட்டம்

திம்பம் மலைப் பாதை 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே புலி தென்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

திம்பம் மலைப் பாதை 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே புலி தென்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

திம்பம் மலைப் பாதையில் புலி, சிறுத்தை நடமாடுவது வழக்கம். இந்நிலையில் ஈரோடு பகுதியைச் சோ்ந்த யூசுப், அவரது நண்பா்கள் தாளவாடிக்கு திம்பம் மலைப் பாதை வழியாக காரில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, 26ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா் மீது புலி படுத்திருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். புலி படுத்திருந்ததை செல்லிடப்பேசியில் விடியோ எடுத்தனா்.

அப்போது வாகனத்தின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்ட புலி மெதுவாக எழுந்து சென்று சாலையோர தடுப்புச் சுவரிலிருந்து கீழே இறங்கி வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. திம்பம் மலைப் பாதையில் புலி நடமாட்டத்தைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். இரவு, பகல் நேரங்களில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் திம்பம் மலைப் பாதையில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com