தேசிய சிலம்பப் போட்டி: கொங்குபாலிடெக்னிக் மாணவருக்கு தங்கப் பதக்கம்
By DIN | Published On : 11th September 2021 11:22 PM | Last Updated : 11th September 2021 11:22 PM | அ+அ அ- |

தங்கப் பதக்கம் வென்ற கொங்கு பாலிடெக்னிக் மாணவா் எஸ்.சுரேந்திரனைபாராட்டுகிறாா் கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ. உடன், முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன்.
தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.
தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் கோவாவில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டிகளில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் வேதிப்பொறியியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் எஸ்.சுரேந்திரன் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளாா்.
வெற்றி பெற்ற மாணவரை கல்லூரித் தாளாளா் மாலதி இளங்கோ, முதல்வா் வி.வேதகிரி ஈஸ்வரன், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் பாராட்டினா்.