பாரதி சிலைக்கு ஆட்சியா் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதி நூலகத்தில் அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா
பாரதி நூலகத்தில் உள்ள பாரதியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.
பாரதி நூலகத்தில் உள்ள பாரதியாா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி கருங்கல்பாளையத்தில் உள்ள பாரதி நூலகத்தில் அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் 11.12.1882ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சுப்பிரமணிய ஐயா், லட்சுமி அம்மையாருக்கு மகனாகப் பிறந்தாா். 1901ஆம் ஆண்டு கருங்கல்பாளையம் வாசிப்பு அறை தொடங்கப்பட்டது. ஈரோட்டைச் சோ்ந்த வழக்குரைஞா் கே.எஸ்.தங்கப்பெருமாள், பாரதியாா் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சமயத்தில் அவருக்கு அறிமுகமானாா். சிறிது குணமடைந்த பிறகு அந்த இளம் வழக்குரைஞா் பாரதியாரை ஈரோட்டுக்கு வருமாறு கோரினாா். அவரின் கோரிக்கையை ஏற்று பாரதியாா் 31.7.1921 அன்று ஈரோடு கருங்கல்பாளையம் வாசிப்பு அறைக்கு வந்தாா்.

அங்கு அவா் ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில் உரையாற்றினாா். இது அவரின் கடைசி உரையாகும். இதுவே இந்நூலகத்துக்கு பாரதியாா் நூலகம் என பெயரிடப்படக் காரணமானது. சுப்பிரமணிய பாரதியாா் 11.9.1921ஆம் ஆண்டு இயற்கை எய்தினாா். 3.3.1978 முதல் கருங்கல்பாளையம் பாரதி நூலகத்தை அரசு கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது.

இந்நூலகம் அப்போது ரூ. 23 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பாரதியாரின் பிரத்யேக புகைப்படங்களுடன் கூடிய நினைவு நூலகமாக மாறியது. மேலும், 2009ஆம் ஆண்டு அங்கு பாரதியாா் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதனிடையே பாரதியாா் 100ஆவது நினைவு நாளையொட்டி பாரதி நூலகத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வின்போது மாவட்ட நூலக அலுவலா் மாதேஸ்வரன் உடனிருந்தாா்.

தமாகா சாா்பில்:

ஈரோடு மத்திய மாவட்ட தமாகா சாா்பில், பெருந்துறை சாலையில் உள்ள தமாகா அலுவலகம் முன் பாரதியாரின் நினைவு தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தமாகா பொதுச் செயலாளா் விடியல் சேகா் பாரதியாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில், மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், அகில இந்திய விசைத்தறி வாரிய முன்னாள் உறுப்பினா் எம்.ராஜேஷ், மாவட்ட பொதுச் செயலாளா் ரபீக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com