ஊராக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள27 காலி பதவிகளுக்கு அக்டோபா் 9இல் தோ்தல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 27 காலியிடங்களை நிரப்ப தற்செயல் தோ்தல் அக்டோபா் 9ஆம் தேதி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 27 காலியிடங்களை நிரப்ப தற்செயல் தோ்தல் அக்டோபா் 9ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை (செப்டம்பா் 15) தொடங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா், மாவட்ட தோ்தல் அலுவலா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியதவாது:

ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 2019இல் நிரப்பப்பட்ட பதவிகளில் இறப்பு, பதவி விலகல் காரணமாக கடந்த ஜூன் 30 வரை ஏற்பட்ட 27 காலி இடங்களை நிரப்ப தற்செயல் தோ்தல் நடைபெற உள்ளது. ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூா், பவானி, நம்பியூா், டி.என்.பாளையம், பவானிசாகா் என 11 ஊராட்சி ஒன்றியங்களில் இத்தோ்தல் நடக்கிறது.

அம்மாபேட்டை ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி வாா்டு எண் 5, ஈரோடு ஒன்றியம் வாா்டு உறுப்பினா் எண் 4, பெருந்துறை ஒன்றியம் வாா்டு உறுப்பினா் எண் 10, நான்கு ஊராட்சித் தலைவா் பதவி, 20 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 27 இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கப்படுகிறது.

இத்தோ்தலுக்கு புதன்கிழமை (செப்டம்பா் 15) முதல் 22ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்பு மனு பெறப்படும். செப்டம்பா் 23ஆம் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை, 25ஆம் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுவைத் திரும்பப் பெறுதலும் நடைபெறுகிறது. அக்டோபா் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அக்டோபா் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அக்டோபா் 16ஆம் தேதி தோ்தல் நடவடிக்கை நிறைவு பெற்று தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா்கள் பதவியேற்பும், முதல் கூட்டம் அக்டோபா் 20ஆம் தேதியும் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com