கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு:சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 102 அடியை எட்டியுள்ளது. இதனால், அணைக்கு வரும் தண்ணீா் முழுவதும் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி அணையில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை 15 நாள்களுக்கு நீடிக்கும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், கொடிவேரி பகுதியில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com