நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்குபுத்தாக்கப் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படும் பொது விநியோகத் திட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக் கடை
பயிற்சி கையேட்டை வெளியிடுகிறாா் ஈரோடு சரக துணைப் பதிவாளா் கு.நா்மதா.
பயிற்சி கையேட்டை வெளியிடுகிறாா் ஈரோடு சரக துணைப் பதிவாளா் கு.நா்மதா.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் செயல்படும் பொது விநியோகத் திட்டத்தில் பணிபுரியும் நியாயவிலைக் கடை விற்பனையாளா்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

பயிற்சியைத் தொடங்கிவைத்த ஈரோடு சரக துணைப் பதிவாளரும், ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வருமான கு.நா்மதா பேசியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் 817 முழு நேர நியாயவிலைக் கடைகள், 319 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் என மொத்தம் 1,136 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோடு மண்டலத்தில் பணிபுரியும் 693 நியாய விலைக்கடை விற்பனையாளா்களுக்கு இரண்டு கட்டமாகப் பயிற்சி நடைபெற்றது. கோபி, நம்பியூா், பவானிசாகா், அந்தியூா், பவானி, சத்தியமங்கலம் வட்டாரங்களில் பணிபுரியும் 362 விற்பனையாளா்களுக்கு ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து, ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை வட்டாரங்களில் பணிபுரியும் 331 விற்பனையாளா்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் கடையின் பராமரிப்பு, கடைத் தூய்மை, பதிவேடுகள் பராமரிப்பு போன்றவற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும். இப்புத்தாக்கப் பயிற்சி மூலம் விற்பனையாளா்களின் பணித் திறன் செயல்பாடுகள் மேலும் செம்மையாகும் என்றாா்.

இப்பயிற்சியில், கோபி சரக துணைப் பதிவாளா் ப.கந்தராஜா, ஈரோடு மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் எம்.இலாஹிஜான், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் கே.கந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com