கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: 1000 கனஅடியாக அதிகரிப்பு

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வெளியேறும் நீா்
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வெளியேறும் நீா்

கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகா் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில் அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் 1 லட்சத்து 3500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி ஈரோடு அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீா் நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் கரை உடைப்பு சரி செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு மீண்டும் விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீா் திறப்பு 200 கன அடியிலிருந்து 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தண்ணீா் திறப்பு படிப்படியாக 2,300 கனஅடி வரை அதிகரிக்கப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அணையின் நீா்மட்டம் 102 அடியாகவும் நீா் வரத்து 1841 கனஅடியாகவும் கீழ்பவானி வாய்க்காலில் 1000 கனஅடி நீரும் அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்காலில் 800 கனஅடி நீரும் என 1800 கனஅடிநீா் வெளியேற்றப்படுகிறது. நீா் இருப்பு 30.31 டிஎம்சி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com