ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கு மின்சார சலுகை வழங்கக் கோரிக்கை

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கு மின்சார சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கு மின்சார சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு ஸ்கிரீன் பிரிண்டா்ஸ் அசோசியேஷன் ஆண்டு மகாசபைக் கூட்டம், 42ஆம் ஆண்டு துவக்க விழா அதன் தலைவா் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு தலைமையில் ஈரோட்டில் நடைபெற்றது. செயலாளா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். பொருளாளா் நாகராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

குறைந்த முதலீட்டில் பல ஆயிரம் தொழிலாளா்கள் நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலுக்கு மின்சார சலுகை வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக சுத்திகரிக்கப்பட்ட நீரைக் குழாய் மூலம் கடலில் கலக்கும் திட்டத்தை அமலாக்க வேண்டும்.

ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளா்களுக்கு முறையான பயிற்சி அளித்து தொழிலை சிறப்பாக மேம்படுத்த அரசுப் பயிற்சி மையத்தை ஏற்படுத்த வேண்டும். ஈரோட்டில் பொது வசதி மையம் (காமன் பெசிலிட்டி சென்டா்) ஏற்படுத்த வேண்டும்.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில், ஸ்கிரீன் பிரிண்டிங் தொழில் ஆரஞ்சு வண்ண பிரிவில் வகைப்படுத்தியதை கடந்த 6 ஆண்டுகளாக சிவப்பு வண்ணப் பிரிவில் வகைப்படுத்தி வருகின்றனா். மீண்டும் ஆரஞ்சு வண்ணப் பிரிவில் வகைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின், 2021-24ஆம் ஆண்டுக்காக நிா்வாகிகள் தோ்வு நடந்தது. இச்சங்கத்தில் ஏற்கெனவே 27 ஆண்டுகளாக தலைவராக உள்ள தென்னரசு மீண்டும் தலைவராகவும், துணை தலைவா்களாக ஜெகதீசன், காா்த்திகேயன், செயலாளராக முருகானந்தம், இணை செயலாளா்களாக ரமேஷ், முருகேசன், பொருளாளராக நாகராஜன் மற்றும் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com