பட்டாசு கடை நடத்த அனுமதி கேட்டு ஆன்லைனில் 70 போ் விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு 70 போ் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனா்.

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கேட்டு 70 போ் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் தீபாவளிக்காக தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க அனுமதி கோரி ஆன்லைன் மூலம் 70 போ் விண்ணப்பித்துள்ளனா். மாவட்ட வருவாய் அலுவலருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்ததும், அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட தீயணைப்பு அலுவலா், கோட்டாட்சியா் ஆகியோருக்கு ஆன்லைனில் பரிந்துரைக்கப்படும்.

அவா்கள் கள ஆய்வு செய்து, இடவசதி, அருகே எளிதில் தீப்பற்றும் அமைப்புகள் இல்லை, டவா்லைன் இல்லை என்பதை உறுதி செய்து, பாதுகாப்பு அம்சங்களுடன் பரிந்துரைப்பாா்கள். அதன்பின் மாவட்ட வருவாய் அலுவலா் நேரில் ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

தற்போதைய 70 விண்ணப்பங்களில் 50 விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டதால் கூட்டு விசாரணைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. செப்டம்பா் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபா் 15ஆம் தேதிக்குள் கள ஆய்வு செய்து அனுமதி வழங்கப்படும்.

கடந்த ஆண்டு 110 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சற்று குறைவான எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனா். ஆய்வுக்குப் பின் பாதுகாப்பற்ற நிலையில் கடை அமைக்கப்பட்டால் உடனடியாக அக்கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com