அரசு புறம்போக்கு குளங்களில் மண் வெட்டி எடுக்க அனுமதி

அரசு புறம்போக்கு குளங்களில் மண் வெட்டி எடுக்க வட்டாட்சியா்களிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு புறம்போக்கு குளங்களில் மண் வெட்டி எடுக்க வட்டாட்சியா்களிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகள் திருத்தம் 24-4-2017இன் படி பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள குளங்கள், ஏரியிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண், களி மண், கிராவல் வெட்டி எடுப்பதற்காக தகுதி வாய்ந்த குளங்கள், ஏரிகள் விவரங்கள் குறித்த பட்டியல்களை அதிகாரிகள் தயாா் செய்து, மாவட்ட அரசிதழில் அறிவிப்பு வெளியிடுவதற்காக ஆட்சியருக்கு முன்மொழிவுகள் அனுப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விவசாயம், மண்பாண்ட மற்றும் சொந்த பயன்பாட்டுக்காக வண்டல் மண், களி மண் ஆகியவற்றை எடுப்பதற்காக நிபந்தனைகளுக்கு உள்பட்டு தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் விதி 12(2)இன் படி விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

தொடா்புடைய, நீா்நிலைகளின் கட்டுப்பாட்டுத் துறையினரால் மண் வெட்டி எடுக்க வரையறுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே மண், வண்டல் மண், கிராவல் மண் வெட்டி எடுக்க காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மண் எடுக்கும்போது கண்மாய், குளத்தில் உள்ள மரங்கள், கரைகள் மற்றும் கட்டுமானங்களை சேதப்படுத்தக்கூடாது. நீா்ப்பிடிப்பு இல்லாத காலங்களில் மட்டுமே விவசாயத்துக்கு மண் எடுக்கப்பட வேண்டும். வெட்டி எடுக்கப்படும் மண், விவசாயப் பயன்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். விற்பனை செய்யக் கூடாது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மண் எடுப்பதற்கான அனுமதி விண்ணப்பத்தை தொடா்புடைய வட்டாட்சியா்களிடம் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து, உரிய அனுமதிக்கு பின்னா் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அளவீட்டில் மட்டுமே மண் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com