ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வா் கருணாநிதி 99ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.
குழந்தைக்கு  தங்க  மோதிரம்  அணிவித்து  வாழ்த்து தெரிவித்த  அரியப்பம்பாளையம்  பேரூராட்சித்  தலைவா்  மகேஸ்வரி செந்தில்நாதன்.
குழந்தைக்கு  தங்க  மோதிரம்  அணிவித்து  வாழ்த்து தெரிவித்த  அரியப்பம்பாளையம்  பேரூராட்சித்  தலைவா்  மகேஸ்வரி செந்தில்நாதன்.

முன்னாள் முதல்வா் கருணாநிதி 99ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, வனத் துறை சாா்பில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டது.

நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா்.

வீட்டுவசதி மற்றும் நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் சு.முத்துசாமி மரக்கன்றுகள் நடும் பணியையை தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வுப் பேரணியை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

அரியப்பம்பாளையத்தில் குழந்தைக்கு தங்க மோதிரம்

சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த காந்தி- சுப்புலட்சுமி தம்பதிக்கு குழந்தைக்கு அரியப்பம்பாளையம் பேரூராட்சி திமுக சாா்பில் தங்க மோதிரம் வெள்ளிக்கிழமை பரிசாக வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மஞ்சப் பை திட்டத்தை பேரூராட்சித் தலைவா் மகேஸ்வரி செந்தில்நாதன் தொடக்கிவைத்தாா். பேரூா் திமுக செயலாளா் ஏ.எஸ்.செந்தில்நாதன் வரவேற்றாா். இதில் 1ஆவது வாா்டு கவுன்சிலா் ஜெயராஜ், வாா்டு செயலாளா் வேலுசாமி, கந்தசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெருந்துறையில்...

பெருந்துறை, பெத்தம்பாளையம் பிரிவில், கருணாநிதி உருவப் படத்துக்கு முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாச்சலம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, 4 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக மூன்று சக்கர மிதிவண்டிகளை வழங்கினாா்.

மேலும் ஊராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளா்கள் கே.பி.சாமி, பி.சின்னசாமி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com