கோபியில் உலக மிதிவண்டி தினப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழா மற்றும் உலக மிதிவண்டி தினப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.
மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் 75ஆவது சுதந்திர அமுதப் பெருவிழா மற்றும் உலக மிதிவண்டி தினப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளா் மற்றும் செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேரணியை கோபி காவல் ஆய்வாளா் சஜினா கொடியசைத்து துவங்கி வைத்தாா். நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற இந்தப்

பேரணியில் பிகேஆா் மகளிா் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள், பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

பேரணியில் தேசியக்கொடி மற்றும் தேசிய தலைவா்களின், பெயா்கள், படங்களை மிதிவண்டியில் பொருத்தியவாறு சுமாா் 7 கிலோமீட்டா் வரை பயணம் செய்தனா். பேரணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில், கல்லூரி முதன்மை செயல் அதிகாரி ஜெகதா லட்சுமணன், முதல்வா் தே.மைதிலி, நாட்டு நலப்பணித்திட்ட ஆலோசகா் ச.மரகதமணி, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com