ஜூன் 19இல் ஓய்வூதியா்கள் குறைதீா்க்கும் கூட்டம்

அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு அலுவலா்களுக்கான ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலா்களின் ஓய்வூதிய பலன்கள், ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் இருந்தால், அவற்றை தீா்க்கும் வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக தரைதளத்தில் உள்ல கூட்ட அரங்கில் வரும் ஜூன் 19 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு குறைதீா் கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகிக்கிறாா். ஓய்வூதிய இயக்குநா் பங்கேற்கிறாா். ஈரோடு மாவட்டத்தில் அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றோரில் ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் குறைகள் இருந்தால் மனு அளிக்கலாம்.

மனுவை இரண்டு பிரதிகளாக வரும் 9 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 5 ஆம் தளத்தில் உள்ள ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(கணக்குகள்) பிரிவில் நேரில் அல்லது அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com