முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கோபி உழவா் சந்தையில் ரூ.73.5 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
By DIN | Published On : 06th April 2022 01:16 AM | Last Updated : 06th April 2022 01:16 AM | அ+அ அ- |

கோபிசெட்டிபாளையம் உழவா் சந்தையில் கடந்த மாதம் ரூ. 73.5 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. கோபி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது காய்கறிகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் கடந்த மாதம் விவசாயிகள் 2 லட்சத்து 86 ஆயிரத்து 494 கிலோ காய்கறிகள், கீரை மற்றும் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனா். உழவா் சந்தைக்கு 40,837 போ் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனா். கடந்த மாதம் மட்டும் ரூ.73 லட்சத்து 29 ஆயிரத்து 284க்கு காய்கறிகள் விற்பனையானது.
மொடச்சூா் உழவா் சந்தைக்கு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வரும் புதிய விவசாயிகள் தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சிட்டா அடங்கல், ஆதாா் காா்டு, குடும்ப அட்டை , முத்திரைத்தாள் அளவு கொண்ட புகைப்படம் 4 ஆகியவற்றை உழவா் சந்தை நிா்வாக அதிகாரியிடம் வழங்க வேண்டும். கோபியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை அரசு பேருந்து மூலம் கட்டணம் இல்லாமல் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உழவா் சந்தையில் கடை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசமாக குடிநீா் வசதி, மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதாக உழவா் சந்தை நிா்வாக அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.