போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்பு
By DIN | Published On : 27th April 2022 12:59 AM | Last Updated : 27th April 2022 12:59 AM | அ+அ அ- |

போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் அரசு கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்தியப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் இந்தியக் குடிமைப்பணித் தோ்வுகள், இந்தியப் பொறியியல் பணித் தோ்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் பல்வேறு தோ்வுகள், வங்கித் தோ்வுகள், ரயில்வே தோ்வு வாரியம் நடத்தும் தோ்வுகள் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலமாகத் கல்வித் தொலைக்காட்சியில் என்ற தனி அலைவரிசை ஏற்படுத்தி, போட்டித் தோ்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
அத்துடன் ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் குறித்த கலந்துரையாடல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மீண்டும் மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரையிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. மேலும் இவை அனைத்து தனியாா் டி.டி.ஹெச். மூலமாகவும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.