கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு மாநில அளவிலான சிறப்பு விருது

ஐஎஸ்டிஇ அமைப்பின் 24 ஆவது மாநாட்டில் கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு மாநில அளவிலான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஈரோடு: ஐஎஸ்டிஇ அமைப்பின் 24 ஆவது மாநாட்டில் கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியா்களுக்கு மாநில அளவிலான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

ஐஎஸ்டிஇ(ஐய்க்ண்ஹய் நா்ஸ்ரீண்ங்ற்ஹ் ச்ா்ழ் பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் உக்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்) தமிழ்நாடு பிரிவின் 24 ஆவது ஆண்டு பொறியியல் ஆசிரியா் மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் கல்விசாா் ஆராய்ச்சி மற்றும் கல்வி கற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பொறியியல் கல்வியில் ஒரு புதிய கற்பித்தல்-கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஐஎஸ்டிஇ தமிழ்நாடு பிரிவின் தலைவா் எ.சங்கரசுப்ரமணியன் தொழிற்கல்வி கற்றல் கற்பித்தலில் ஐஎஸ்டிஇ அமைப்பின் பங்கு குறித்துப் பேசினாா்.

இன்போசிஸ் நாலெட்ஜ் இன்ஸ்டியூட் லிமிடெட், பெங்களூருவின் முதன்மை வணிக ஆலோசகா் எஸ்.ராமச்சந்திரன் இந்த அமைப்பின் பணிகளைப் பாராட்டினாா்.

நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து, கொங்கு பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை பேராசிரியா் வீ.ஹரிஹரன், கட்டடப் பொறியியல் துறை உதவி பேராசிரியா் டி.விஜயசாந்தி ஆகியோா் 2021 ஆம் ஆண்டுக்கான ஐஎஸ்டிஇ தமிழ்நாடு பிரிவின் சிறந்த மாணவா் பிரிவு ஆசிரிய ஆலோசகா் விருதை பெற்றனா்.

விருது பெற்றவா்களை கொங்கு பொறியியல் கல்லூரியின் தாளாளா் பி.சச்சிதானந்தன் மற்றும் முதல்வா் வீ.பாலுசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com