முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
கைப்பேசி பழுது பாா்த்தல் பயிற்சி
By DIN | Published On : 29th April 2022 04:29 AM | Last Updated : 29th April 2022 04:29 AM | அ+அ அ- |

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவசமாக கைப்பேசி பழுது பாா்த்தல் பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த பயிற்சி மைய நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு, கொல்லம்பாளையம் புறவழிச்சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம் 2ஆவது தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு, கைப்பேசி பழுது பாா்த்தல் பயிற்சி இலவசமாக 30 நாள்களுக்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியில் ஈரோடு மாவட்ட கிராமப்புறத்தைச் சோ்ந்தவா்கள் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுவோா், அவரது குடும்பத்தாா், வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
18 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விருப்பமுள்ளவா்கள் 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்து இப்பயிற்சியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.