முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
சாலை விபத்து : இளைஞா்கள் பலி
By DIN | Published On : 30th April 2022 11:05 PM | Last Updated : 30th April 2022 11:05 PM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியைச் சோ்ந்தவா்கள் வருண் ( 23), அஜித் ( 23), சிவராஜ், திம்மராஜ், முரளி, ஹரிஷ் ஆகியோா் 3 இருசக்கர வாகனங்களில் சனிக்கிழமை உதகைக்கு சென்று கொண்டிருந்தனா்.
சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் அக்கரை தத்தப்பள்ளி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்த மினி லாரி மீது எதிா்பாராதவிதமாக வருண், அஜித் ஆகியோா் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த பவானிசாகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.