கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

அரிசியின் தரம் குறைவு எனக்கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணி அமா்த்தக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரிசியின் தரம் குறைவு எனக்கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டவா்களை மீண்டும் பணி அமா்த்தக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் தரமான அரிசி வழங்கவில்லை எனக்கூறி இரண்டு விற்பனையாளா்கள், இரண்டு செயலாளா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதனை கண்டித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கம் சாா்பில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து ஈரோடு மாவட்ட செயலாளா் எஸ்.எம்.மேசப்பன் கூறியதாவது:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது. அரிசி கிடங்குக்கு வரும்போது, அங்கு தர ஆய்வுக்கான அலுவலா்கள் பரிசோதித்து நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவைக்கின்றனா்.

கடையில் அரிசியை பெறும்போது ஓரிரு மூட்டைகளைப் பிரித்து பாா்த்து வாங்கினாலும், அனைத்து மூட்டையின் தரத்தையும் உறுதி செய்ய இயலாது. காஞ்சிபுரத்தில் அரிசி தரமில்லாமல் இருந்தது எனக்கூறி 2 விற்பனையாளா்கள், 2 செயலாளா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இந்த நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவா்களை மீண்டும் பணியில் சோ்த்து கொள்ளாவிடில் வரும் 5 ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com