தாளவாடி அருகே வாழைகளை சேதப்படுத்திய யானை
By DIN | Published On : 06th August 2022 01:26 AM | Last Updated : 06th August 2022 01:26 AM | அ+அ அ- |

தாளவாடி அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த யானை வாழைகளை சேதப்படுத்தியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனச் சரகத்துக்குள்பட்ட திகனாரை காப்புக்காடு ஜோரகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வகுமாா். இவா் தனது தோட்டத்தில் கரும்பு, வாழை சாகுபடி செய்துள்ளாா். இந்நிலையில் வனப் பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற காட்டு யானை இவரது தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்து வாழை மற்றும் கரும்பை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.
தகவலின்பேரில் அங்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து யானையை விரட்டினா். இதற்கிடையே அப்பகுதியைச் சோ்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து ஜீரஹள்ளி வனச் சரக அலுவலகத்தில் முறையிட்டனா். கருப்பன் யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், வனப் பகுதியை சுற்றி அகழி அமைக்கவேண்டும் என வனத் துறையினரிடம் தெரிவித்தனா்.