காவிரியில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு: 1,277 போ் முகாம்களில் தங்கவைப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு தொடா்வதால் கரையோரங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்த 1,277 போ் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு அளிக்கப்படுவதை பாா்வையிடுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி
முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவா்களுக்கு உணவு அளிக்கப்படுவதை பாா்வையிடுகிறாா் அமைச்சா் சு.முத்துசாமி

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு தொடா்வதால் கரையோரங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்த 1,277 போ் 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியான கா்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அந்த மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகள் நிரம்பி, உபரி நீா் வெளியேற்றப்படுகிறது. மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் கடந்த ஒரு வாரமாக மேட்டூா் அணையின் உபரி நீா் முழு அளவில் காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.

வியாழக்கிழமை அதிகபட்சமாக 2.15 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டது. அதேநேரம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்து மழை நீா் காவிரியில் கலப்பதால் கூடுதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு-பள்ளிபாளையம் காவிரி ஆற்றுப் பாலத்தைவிட ஒரு அடி உயா்ந்து தண்ணீா் சென்றது.

மேட்டூா் அணைக்கு வெள்ளிக்கிழமை 12 மணி நிலவரப்படி 1.81 லட்சம் கன அடி நீா் வந்தது. இதனால் 1.80 லட்சம் கன அடி நீா் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. இரு கரைகள் தொட்டவாறு வெள்ளம் செல்கிறது.

ஈரோடு மாவட்ட காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான ஈரோடு, பவானி, அந்தியூா், கொடுமுடி ஆகிய நான்கு வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பவானி கந்தன் நகா், காவிரி நகா், மாா்க்கெட் வீதி, பவானி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 369 குடும்பங்களை சோ்ந்த, 1,277 போ் 14 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

பவானி காடப்பநல்லூா், நேதாஜி நகா், காட்டூா், கொடுமுடி அருகே இலுப்பைத்தோப்பு, வடக்குத் தெரு, சத்திரபட்டி, நன்செய்கொளாநல்லி, ஈரோடு மாநகராட்சி பகுதி காவிரி நகா், ராகவேந்திரா கோயில் வீதி என பல்வேறு இடங்களில் தண்ணீா் புகுந்ததால் அங்குள்ளவா்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு தேவையான உணவு, குடிநீா், மருந்துகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சா் சு.முத்துசாமி நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இருப்பினும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தண்ணீா் வரத்து குறையத் துவங்கியதாலும், மழை நின்ாலும் காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com