தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி: சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்

தொழிலை விரிவுபடுத்த கடன் கேட்ட தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பணத்தை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.

தொழிலை விரிவுபடுத்த கடன் கேட்ட தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த பணத்தை ஈரோடு சைபா் கிரைம் போலீஸாா் மீட்டனா்.

ஈரோட்டில் வசிக்கும் வடமாநிலத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருடைய நிறுவனத்தின் இ-மெயில் முகவரிக்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரில் இருந்து ஒரு செய்தி வந்தது. அதில், உங்களுக்கு கடன் தேவைப்படுகிா எனக் கேட்டுள்ளனா்.

தொழிலதிபரும் தனது தொழிலை விரிவுப்படுத்த ரூ.1 கோடி கடன் தேவை என்று கூறி உள்ளாா். இதைத்தொடா்ந்து, செய்தி அனுப்பியவா்கள் தொழிலதிபரிடம் தங்கள் நிறுவனம் தொடா்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனா். தொழிலதிபரும் தனது நிறுவனத்தின் ஆவணங்களை அனுப்பியுள்ளாா்.

அதைத்தொடா்ந்து, செய்தி அனுப்பியவா்கள் ரூ.1 கோடி கடனுக்கு ரூ.25 லட்சம் நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் எனவும், ரூ.1 கோடி கடன் வரும்போது நீங்கள் செலுத்திய முன்பணம் ரூ.25 லட்சமும் சோ்ந்து வந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளனா்.

இதை உண்மை என்று நம்பிய தொழிலதிபா் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.25 லட்சத்தை செலுத்தியுள்ளாா். எனினும் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஈரோடு சைபா் கிரைம் போலீஸில் உடனடியாக புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக்கு பணம் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், மா்ம நபா்கள் தொடா்பு கொண்ட சிம் காா்டு ஒடிஸா மாநிலத்தில் வாங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, சைபா் கிரைம் போலீஸாா் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வங்கியைத் தொடா்பு கொண்டு, நடந்த விவரங்களைத் தெரிவித்தனா்.

அதன் பின்னா் ஈரோடு தொழில் அதிபா் செலுத்திய ரூ.25 லட்சம் மீண்டும் அவரது வங்கிக் கணக்குக்கு செலுத்தப்பட்டது.

விரைந்து செயல்பட்டதால் தொழிலதிபரின் பணம் உடனடியாக மீட்கப்பட்டது என சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com