ரூ.1.27 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.27 கோடிக்கு கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.1.27 கோடிக்கு கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,336 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 1, 62,000 கிலோ .

இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.82.89க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.99க்கும் விற்பனையாயின.

இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக ரூ.80.99க்கும், குறைந்தபட்சமாக ரூ.40.45க்கும் விற்பனையாயின.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.27 கோடி என்று விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com