வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதலுக்கு 77,700 படிவங்கள் பெறப்பட்டுள்ளன

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக 77,703 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா் எஸ்.சிவசண்முகராஜா

ஈரோடு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக 77,703 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளா் எஸ்.சிவசண்முகராஜா பேசினாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா முன்னிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த ஈரோடு மாவட்ட வாக்காளா் பட்டியல் சிறப்புப் பாா்வையாளரும், பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகத் தலைவருமான எஸ்.சிவசண்முகராஜா பேசியதாவது:

ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைந்தவா்கள், விடுபட்ட வாக்காளா்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள 2,222 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 951 வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் கடந்த 8 ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடா்பாக 77,703 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்த படிவங்களை முறையாக ஆய்வு செய்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். இப்பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

எந்தவொரு தகுதியான வாக்காளரின் பதிவும் விடுபட்டுவிடக் கூடாது. தகுதியற்ற வாக்காளரின் பதிவும் பட்டியல்களில் இடம்பெற்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறவேண்டும் என்றாா்.

கூட்டத்தில் பயிற்சி ஆட்சியா் என்.பொன்மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் குமரன், கோட்டாட்சியா்கள் சதீஷ்குமாா், திவ்யபிரியதா்ஷினி, தோ்தல் வட்டாட்சியா் சிவகாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com