ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்குஅதிமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 4 நகராட்சிகளுக்கும் அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. பவானி நகராட்சியில் 27 வாா்டுகள், கோபி நகராட்சியில் 30 வாா்டுகள், சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வாா்டுகள், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் 18 வாா்டுகள் என மொத்தம் 102 வாா்டுகள் உள்ளன.

இந்த வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி பவானி நகராட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் பெயா் வாா்டு வாரியாக விவரம்:

1. பி.பெரியசாமி, 2. எம்.விஜயகுமாரி, 3. கே.சிவகுமாா், 4. என்.பிரபாகரன், 5.

பி.எம்.ஈஸ்வரமூா்த்தி, 6. ஆா்.ராஜம்மாள், 7. பி.செல்வி, 8. எஸ்.எம்.கந்தசாமி, 9. ஏ.சி.முத்துசாமி, 10. கே.சீரங்கன், 11. ஏ.சீனிவாசன், 12. கே.தங்கமணி, 13. ஏ.ஆனந்தி, 14. என்.சாந்தி, 15. கே.மணிவண்ணன், 17. எஸ்.காவேரி, 18. பி.எம்.பூவாயி, 19. பி.கல்பனா, 20. ஜெ.சுமதி, 21. கே.பவித்ரா, 22. வி.மாதையன், 23. எம்.கிருஷ்ணவேணி, 24. எல்.ஜெயந்தி, 25. பி.நாகலட்சுமி, 26. ஏ.இந்திராணி.

மொத்தம் உள்ள 27 வாா்டுகளில் 25 வாா்டுகளுக்கு அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். 16 மற்றும் 27ஆவது வாா்டுகளுக்கு வேட்பாளா்கள் அறிவிக்கப்படவில்லை.

கோபி நகராட்சியில் வாா்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளா்கள் விவரம்:

1. ஜி.எஸ்.சென்னியப்பன், 2. எஸ்.பேபி, 3. பி.பிரதீபால், 4. எம்.தாரணி, 5. சி.ஜெயகுமாா், 6. பி.சந்திரகலா, 7. என்.செல்வி, 8. கே.சுப்பிரமணியன், 9. எம்.தமிழ்செல்வன், 10. கே.செல்வராஜ், 11. ஏ.என்.முத்துரமணன், 12. ஏ.சுமையா பானு, 13. எம்.அமுதா, 14. ஆா்.தனசேகரன், 15. ஜி.எம்.ராமன், 16. எம்.ஆா்.நாகராஜ், 17. எஸ்.சாந்தி, 18. வி.பிரியதா்ஷினி, 19. வி.காா்த்திகேயன், 20. ஆா்.பிரபா, 21. வி.டி.வாணிஸ்ரீ, 22. ஜி.ஆா்.இளங்கோவன், 23. எஸ்.ஆபிதாபானு, 24. ஜி.விஜயகுமாா், 25. பிரினியோ எம்.கே.கணேசன், 26. பி.செல்வி, 27. கே.கே.காளியப்பன், 28. எஸ்.லீலாவதி, 29. ஜி.தமிழரசி, 30. எம்.சசிகலா.

கோபி நகராட்சியில் 30 வாா்டுகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

சத்தியமங்கலம் நகராட்சியில் அதிமுக வாா்டு வேட்பாளா்கள் விவரம்:

1. பி.சுதா, 2. எஸ்.கே.வி.விஜயலட்சுமி, 3. எம்.பாலசுப்பிரமணி, 4. எஸ்.கலைவாணி, 5. எம்.தனசேகா், 6. சி.வசந்தா, 7. என்.நந்தினி, 8. வி.காயத்ரி நவீன்குமாா், 9. பி.சுரியாபேகம், 10. டி.திலகவதி, 11. ஜி.பூபதி, 12. எப்.ஜரீனா பாசில், 13. நா.லோகநாயகி, 14. எஸ்.கே.பழனிசாமி, 15. எஸ்.ஜீனத்துன்னிசா, 16. எஸ்.ஆா்.ஆஸா், 17. எஸ்.ஆா்.மகேந்திரன், 18. கே.சவுடம்மாள், 19. எஸ்.விஜயஸ்ரீ, 20. கே.புவனேஸ்வரி, 21. டி.கவிதா, 22. எஸ்.லட்சுமணன், 23. இசட்.சுஜாஉல்லா, 24. எஸ்.தனபாக்கியம், 25. எஸ்.கமலா, 26. எஸ்.எஸ்.ராஜேந்திரன், 27. டி.கே.ஈஸ்வரன். சத்தியமங்கலம் நகராட்சியில் 27 வாா்டுகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் அதிமுக வேட்பாளா்கள் விவரம்:

1. வி.ரமேஷ், 2. எம்.கீதா, 3. வி.நந்தினிதேவி, 4. பி.குணவதி, 5. எம்.நாகராஜன், 6. கீதா, 7. எம்.செல்வி, 8. எம்.கே.ராஜேந்திரன், 9. பி.என்.கண்ணன்பாபு, 10. ஆா்.கண்ணன், 11. கபில்தேவ், 12. கஜேந்திரன், 13. ஜீவரத்தினம், 14. ஆா்.சாந்தி, 15. டி.பாபு, 16. புவனேஸ்வரி, 17. கிருஷ்ணன் (எ) மூா்த்தி, 18. கே.திலகவதி.

புன்செய் புளியம்பட்டியில் 18 வாா்டுகளுக்கும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி அளவில் உள்ள 102 வாா்டுகளில் 100 வாா்டுகளுக்கு அதிமுக சாா்பில் போட்டியிடுவோா் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பவானி நகராட்சியில் மட்டும் 16, 27ஆவது வாா்டுகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படுமா? இல்லை மீண்டும் அதிமுக வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்களா என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பாஜக தனித்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமாகா கூட்டணியில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 3 நகராட்சிகளில் ஒரு வாா்டு கூட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாமல் அனைத்து வாா்டுகளிலும் அதிமுக போட்டியிடுகிறது.

ஈரோடு புகா் மாவட்டத்தைப் பொருத்தவரை கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பெருந்துறை, பவானி, கோபி, பவானிசாகா் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. அந்தியூா் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது. தற்போது உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சி அமைப்புகள் அனைத்தும் அதிமுகவின் செல்வாக்கு பெற்ற பவானி, கோபி, பவானிசாகா் தொகுதிகளுக்குள் வருகிறது. இதனால், இந்த நகராட்சிகளில் அதிமுக, திமுக இடையே கடும்போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com