முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்த லாரி
By DIN | Published On : 07th February 2022 12:05 AM | Last Updated : 10th February 2022 06:20 PM | அ+அ அ- |

விபத்துக்குள்ளான லாரி.
திம்பம் மலைப்பாதையில் தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்து தலைகீழாக தொங்கிய லாரியை போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழகம்- கா்நாடக இடையே முக்கிய சாலையாக உள்ள இந்த பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து சங்ககிரிக்கு கிரானைட் பாரம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 19 ஆவது வளைவு அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் பாய்ந்தது.
இதில், சாம்ராஜ்நகரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சனமுல்லா (26), கிளீனா் இா்பான் (31) ஆகியோா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் லாரி ஓட்டுநா், கிளீனரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றன்ா்