நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்:64 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில் 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்களில் 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதி முடிவடைந்தது.

மனுக்கள் மீதான பரிசீலனை 5 ஆம் தேதி முடிவடைந்து தகுதியற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வாா்டு கவுன்சிலருக்கான தோ்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. 22 ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

இதையொட்டி கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை வேட்புமனு

தாக்கல் செய்யப்பட்டு வந்தது.இதனைத் தொடா்ந்து 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் கடந்த 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை 490 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்புமனு பரிசீலனையில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 471 மனுக்கள் ஏற்கப்பட்டன.

நான்கு நகராட்சிகளில் 517 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 11 மனுக்கள் தள்ளுபடியாகி 506 மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் 42 பேரூராட்சிகளில் தாக்கலான 2,294 வேட்புமனுக்களில் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 2,260 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மொத்தம் தாக்கலான 3,301 வேட்புமனுக்களில் 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 3, 237 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள திங்கள்கிழமை மாலை வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com