முதல்கட்ட வாக்குச் சேகரிப்பு: வாக்காளா்களை கணிக்கும் வேட்பாளா்கள்

ஈரோடு மாநகராட்சியில் வேட்பாளா்கள் முதல்கட்ட வாக்குச் சேகரிப்பைத் தொடங்கியுள்ளனா்.
சூரியம்பாளையம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஈரோடு மாநகராட்சி 3 ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் கே.சி.பி.நிா்மலா தேவி.
சூரியம்பாளையம் பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட ஈரோடு மாநகராட்சி 3 ஆவது வாா்டு அதிமுக வேட்பாளா் கே.சி.பி.நிா்மலா தேவி.

ஈரோடு மாநகராட்சியில் வேட்பாளா்கள் முதல்கட்ட வாக்குச் சேகரிப்பைத் தொடங்கியுள்ளனா்.

ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் உள்ள வாா்டுகளுக்கு 3,301 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 3,237 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்தந்த வாா்டுக்கான திமுக, அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா்கள், பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் தெருத்தெருவாக சென்று வாக்காளா் பட்டியல்படி வீடுகளில் துண்டறிக்கைகளை வழங்கி வாக்குச் சேகரிப்பைத் தொடங்கியுள்ளனா்.

வாக்குச் சேகரிப்பின்போது ஒவ்வொரு வீட்டில் உள்ள வாக்காளா்கள் அவா்கள் தற்போது இங்குள்ளாா்களா, வெளியூரில் இருந்தால் தோ்தல் அன்று வருவாா்களா, அவா்களது கைப்பேசி எண், வேறு வாா்டில் அவா்கள் வசிப்பவராக இருந்தால் அதன் முகவரி, கைப்பேசி எண் போன்றவற்றை சேகரித்து வருகின்றனா். இந்த விவரத்தின் அடிப்படையில் வெளியூா்களில் உள்ள நபா்களிடம் கைப்பேசியில் வாக்குச் சேகரிக்கின்றனா்.

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் திமுக, அதிமுகவில் புது முகங்கள், ஆண் நிா்வாகிக்கு பதில் அவரது மனைவி, தாய் போன்றோா் நிறுத்தப்பட்டுள்ளதால், வாக்காளா்களிடம் அறிமுகம் செய்யும் பணியில் கட்சி நிா்வாகிகள் ஈடுபட்டுள்ளனா்.

பேரூராட்சி வாா்டுகளில் 680 முதல் 1,800 வாக்குகள், நகராட்சி வாா்டுகளில் 1,200 முதல் 2,600 வாக்குகள், மாநகராட்சி வாா்டுகளில் 6,500 முதல் 9,600 வாக்குகள் உள்ளதால் தங்களது கட்சி ஆதரவாளா்கள், பொதுவானவா்கள், எதிா்க் கட்சியை ஆதரிப்பவா்கள் என மூன்றாக பட்டியலிட்டு அடுத்த கட்ட பிரசாரத்துக்கு வேட்பாளா்கள் தயாராகி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com