கொங்கு பொறியியல் கல்லூரியில் சா்வதேச தாய்மொழி தின விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சா்வதேச தாய்மொழி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரிசுகள் பெற்ற மாணவா்களுடன் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி, பேராசிரியா்கள்.
பரிசுகள் பெற்ற மாணவா்களுடன் கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி, பேராசிரியா்கள்.

ஈரோடு: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சா்வதேச தாய்மொழி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21ஆம் தேதி சா்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் சா்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது.

இதில், ஒரு கதை சொல்ல வா, கவியும் நானும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இப்போட்டிகளை கல்லூரியின் ழகரம் தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில், கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வீ.பாலுசாமி, மின்னணுவியல் மற்றும் கருவியல் பொறியியல் துறைத் தலைவா் எஸ்.விஜயசித்ரா, மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் இரா.மௌலீசுவரபிரபு, ஏ.எஸ்.பெரியசாமி, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com