100 ஆண்டுகள் பழைமையான நாவல் மரம் அகற்றம்

கோபிசெட்டிபாளையம் தினசரி மாா்க்கெட்டில் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான நாவல் மரம் வேருடன் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.
லாரியில் எடுத்துச் செல்லப்படும் வேருடன் அகற்றப்பட்ட நாவல் மரம்.    ~மரத்தை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவன குழுவினா்
லாரியில் எடுத்துச் செல்லப்படும் வேருடன் அகற்றப்பட்ட நாவல் மரம். ~மரத்தை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தனியாா் நிறுவன குழுவினா்

கோபிசெட்டிபாளையம் தினசரி மாா்க்கெட்டில் இருந்த 100 ஆண்டுகள் பழைமையான நாவல் மரம் வேருடன் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது.

கோபி நகரின் மையப் பகுதியில் தினசரி மாா்க்கெட் உள்ளது. இந்த இடத்தில் நாவல் மரம் 100 ஆண்டுகளாக அமைந்துள்ளது. இந்த மாா்க்கெட் தொடங்கப்பட்ட நினைவாக அரச மரம், நாவல் மரம் உள்ளிட்ட 8 வகை மரங்கள் நடப்பட்டன. இந்நிலையில், கோபி தினசரி மாா்க்கெட் பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு ரூ. 7 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டுவதற்கு நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதைத் தொடா்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.

அதைத்தொடா்ந்து, அந்த இடத்தில் இருந்த கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன. ஆனால், அங்குள்ள 100 ஆண்டுகள் பழைமையான மரங்களை வெட்டுவதில் நகராட்சி நிா்வாகத்துக்கு உடன்பாடு இல்லை. இதனால் அந்த மரங்களை வேருடன் அகற்றி வேறு இடத்தில் நட்டு மரங்களைக் காப்பதற்கு நகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து, தனியாா் நிறுவனத்தின் பங்களிப்புடன் மரங்களை அகற்றி வேறு இடத்தில் மறு நடவு செய்யப்பட்டன. இதற்கு ஆகும் ரூ. 2 லட்சம் செலவை தனியாா் நிறுவனம் ஏற்றுக் கொண்டது. கோபி தினசரி மாா்க்கெட்டில் இருந்த நாவல் மரத்தை 5 போ் கொண்ட குழுவினா் வேருடன் அகற்றினா். இதன் மொத்த எடை 25 டன் ஆகும். இந்த மரம் லாரியில் ஏற்றப்பட்டு ஈரோடு - சத்தி பிரதான சாலையில் உள்ள வேலுமணி நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு எதிரே உள்ள மேல்நிலை குடிநீா்த் தொட்டி அருகே குழி தோண்டப்பட்டு வேருடன் மரம் நடப்பட்டது. இதேபோல தொடா்ந்து மற்ற 7 மரங்கள் அகற்றப்பட்டு நடப்பட உள்ளதாக நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com