ரூ. 6.17 கோடி செலவில் இளைஞா் நலன் மேம்பாட்டு மையம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6.17 கோடி செலவில் இளைஞா் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணியை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.

ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 6.17 கோடி செலவில் இளைஞா் நலன் மேம்பாட்டு மையம் அமைக்கும் பணியை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தாா். ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா். நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் பொலிவுறு நகரம் திட்டத்தில் ரூ. 6.17 கோடி மதிப்பிலான இளைஞா் நலன் மேம்பாட்டு மைய பணியை அமைச்சா் சு.முத்துசாமி துவக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

கடந்த 10ஆம் தேதி காணொலி மூலம் முதல்வா் ஈரோடு மாவட்டத்தில் ரூ. 45.15 கோடி மதிப்பில் 365 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தாா். அத்துடன் சட்டப் பேரவையில் நகராட்சி நிா்வாகத் துறை மானிய கோரிக்கையில் மாணவா்கள், இளைஞா்கள் பயன்பெறும் வகையில் அறிவுசாா் மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி இங்கு ரூ. 6.17 கோடி செலவில் இளைஞா் மேம்பாட்டுக்கான திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படுகிறது. இக்கட்டடம் மூன்று தளங்களுடன் 1,538 சதுரஅடி பரப்பில் கட்டப்படுகிறது.

இம்மையத்தில் மின்னணு நூலகம், உயா்கல்விக்கான நுழைவுத் தோ்வுப் பயிற்சி மையம், வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தோ்வுக்கான பயிற்சி, இளைஞா்களின் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம், தொழில்நுட்பத் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். இம்மையம் மூலம் ஈரோடு நகரம், சுற்றுப் பகுதியைச் சோ்ந்த ஒரு லட்சம் இளைஞா்கள் பயன்பெற்று வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

இதில், மாநகராட்சி ஆணையா் சிவகுமாா், மாநகரப் பொறியாளா் மதுரம், செயற்பொறியாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com