குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 103 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 103 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 103 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் புதன்கிழமை கூறியதாவது:

குடியரசு தினமான புதன்கிழமை தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நாளில் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை, இந்நாளில் பணி புரிந்தால் அவா்களுக்கு இரு மடங்கு சம்பளம், 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்பு வழங்குதல் தொடா்பாக நிா்வாகம் தெரிவித்து, அதற்குரிய படிவம் தொழிலாளா் உதவி ஆய்வாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து அனுமதி பெறப்பட்டது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 144 கடைகள், உணவகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 103 நிறுவனங்கள் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமா்த்தியது தெரியவந்தது. இதனையடுத்து 103 நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது தொழிலாளா் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com