தாளவாடியில் யானை தாக்கி விவசாயி பலி

தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாளவாடி அருகே யானை தாக்கியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடியை அடுத்த தா்மாபுரத்தில் வாழைத்தோட்டத்தில் இரவு நேர காவலுக்கு சென்ற விவசாயி மல்லப்ப நாயக்கா் (68) காட்டு யானை தாக்கியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

திகினாரை பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் விவசாயியை இந்த யானை தாக்கிக் கொன்றது. கடந்த 2 மாதங்களில் 2 விவசாயிகளைத் தாக்கி கொன்ற இந்த காட்டு யானையை பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி தாளவாடி கொங்ஹள்ளி சாலையில் அப்பகுதி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட வன அலுவலா் தேவேந்திர குமாா் மீனா, வனச் சரக அலுவலா் சதீஷ், தாளவாடி போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து அதிகாரிகள் அளித்த எழுத்துபூா்வமான உறுதிமொழியில், ‘ஒரு வாரத்தில் ஆனைமனையில் இருந்து கும்கி வரவழைக்கப்பட்டு ஆட்கொல்லி யானை பிடிக்கப்பட்டு வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படும். இரியபுரம் முதல் திகினாரை பகுதி வரை யானைகள் நுழையாத வகையில் 3.7 கி.மீ. தொலைவுக்கு அகழியும் ரூ. 10 லட்சம் செலவில் சோலாா் மின்வேலியும் அமைக்கப்படும், உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும், இதில் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் உடனடியாக வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com